↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்தவர் அடிலினா அல்பு, 25 வயதான இவர் பேஸ்புக்கில் இட்ட பதிவு பல ஆண்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. மனதளவில் ஆண்கள் எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது பிரச்சனை இல்லை, ஆனால் குழந்தை தேவைப்படும் ஒரு ஆணை சந்திப்பதே பிரச்சனை. அதற்காக, எந்த பிரயோஜனமில்லாத உறவில் என் நேரத்தை வீணடிப்பதை நான் விரும்பவில்லை.
நான் குழந்தை பெற உதவுபவர்களுக்கு 350 பவுண்ட் பணம் தருகிறேன். உங்களுக்கு சுகம், எனக்கு குழந்தை அவ்வளவுதான். இதற்கு சம்மதிப்பவர்கள் மருத்துவரிடம் கருவுறும் சோதனை செய்துவிட்டு வர வேண்டும் மற்றும் பெற்றோர் உரிமைகளை எனக்கே அளித்து விட வேண்டும். ஆண்கள் முதிர்ச்சியடையாதவர்கள், எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். நான் முதிர்ச்சியடைந்தவள், சுதந்திரமானவள், எனக்கு ஒரு குழந்தை தேவை என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல பேஸ்புக் பயனாளர்கள், அடிலினாவின் பதிவையும் அவரது சுதந்திரமான குணத்தையும் பாராட்டியுள்ளனர். அதே நேரம் அவருக்கு முகம் சுளிக்க வைக்கும் விமர்சனங்களும் குவிந்த படி இருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top