↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய அணித்தலைவர் டோனி ‘கவாசாகி நின்ஜா எச் 2’ என்ற புதிய ‘பைக்’ ஒன்றை வாங்கியுள்ளார்.
இதன் விலை ரூ. 29 லட்சம் ஆகும். ‘பைக்’ பிரியரான இவரிடம் பல்வேறு ரகங்களில் ‘பைக்குகள்’ உள்ளன.
டோனி போட்டி இல்லாத நாட்களில் இதுகுறித்த தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார்.
60 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருந்தாலும், அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர், முத்தரப்பு மற்றும் உலகக்கிண்ணம் என, 5 மாதங்கள் ‘பிசியாக’ இருந்த இவர், மீண்டும் நேற்று ‘டுவீட்’ செய்தார்.
இதில்,‘ கடைசியாக காத்திருத்தல் முடிந்து விட்டது. இருப்பினும், அவளை என்னுடன் அழைத்துச் செல்ல, இன்னும் ஒரு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். எதைச் சொல்கிறேன் என, யோசியுங்கள்,’ என, தெரிவித்தார்.
தனது மகளைத் தான் சொல்கிறார் போல என்று நினைத்தால், அருகே ‘இன்ஸ்டாகிராம்’ முகவரி இணைத்திருந்தார்.
அதில் சென்று பார்த்தால், டோனி புதிதாக வாங்கியுள்ள ‘கவாசாகி நின்ஜா எச் 2’ என்ற ‘பைக்’ படம் இருந்தது. இதில்,‘ நான் கூறியது இந்த ‘பைக்கை’ தான்,’ என, குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின் தான் இதை எடுத்து ‘ஜாலியாக’ சுற்றி வரமுடியும் என்பதால் தான், இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் டோனி.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top