↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நண்பர்களாக இருந்த தனுஷும் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இப்போது எதிரும் புதிருமாக மாறியுள்ளனர்.தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்‘, ‘மயக்கம் என்ன’ படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். இப்போது தனுஷ் நடிக்கும் ‘சூதாடி’படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரை இசை அமைக்கச் சொல்லியிருந்தார் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில் அதில் இருந்து ஜி.வி.பிரகாஷ் விலகி விட்டதாகவும் அவருக்குப் பதில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்‘ படத்துக்கு இசை அமைக்க இருந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதைத் தடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் பக்கம் செல்வராகவனைக் கொண்டு சென்றது தனுஷ் என்று கூறப்படுகிறது. இதே போல வெற்றிமாறன் உதவி யாளர் மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார்.
இந்தப் படத்துக்கு தனுஷும் தயாரிப்பாளர் என்பதால் ஜி.வி.பிரகாஷுக்குப் பதில் வேறொரு இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய சொன்னாராம் தனுஷ். ஆனால் மணிகண்டன் மறுத்துவிட்டார். இப்போது வெற்றிமாறன் இயக்கும் ‘சூதாடி’ படத்துக்கு தனுஷ் தயாரிப்பாளர் என்பதால், ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக்க வேண்டாம் என்றாராம். இதைக் கேள்விபட்ட ஜி.வி.பிரகாஷ், ‘படத்தில் இருந்து நானே விலகிக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.வெற்றிமாறனும் ஜி.வி.பிரகாஷும் நண்பர்களாக இருப்பதால் தனுஷ் பிரச்னை காரணமாக, இருவருக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் திரையுலகினர் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.