↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டதால் எங்கும், எப்போதும் பெண்களுக்கே அழகு குறிப்புக்களை வழங்குகிறார்களா? கவலைப்படாதீர்கள். தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களுக்காக கோடையில் கருப்பாகாமல் இருக்க ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. 

இந்த டிப்ஸ்களைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தவறாமல் கோடைக்காலத்தில் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் சூரியக்கதிர்களின் கடுமையான தாக்கத்தில் இருந்து சருமத்திற்கு நல்ல பாதுகாப்பு வளையத்தைப் போடலாம். மேலும் பெண்களுக்கு பொறுமை இருப்பதால் தான், அவர்களுக்கு அதிக அழகு குறிப்புகளைக் கொடுக்கிறார்கள். எனவே அழகு பராமரிப்பில் பொறுமை அவசியம் வேண்டும். சரி, இப்போது கோடையில் ஆண்கள் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகளைப் பார்ப்போமா!!!

கோடையில் சருமத்தை தினமும் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் கருமையாக காட்டும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு காணப்படும். அதற்கு வீட்டில் உப்பு அல்லது சர்க்கரையை எடுத்து, அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தை ஸ்கரப் செய்யுங்கள்.


கோடையில் உதடுகளுக்கும் பராமரிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டிற்கு வெண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

கோடைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சருமத்தில் அதிக எரிச்சலை உணரக்கூடும். இதன் மூலம் சரும பிரச்சனைகள் அதிகரித்து, அழகு பாதிக்கப்படும்.

கோடையில் ஆண்கள் ஃபேஸ் பேக்கை தவறாமல் போட வேண்டும். அதுவும் பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக் என்றால் இன்னும் நல்லது. இல்லாவிட்டால், கடலை மாவில் பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று காணப்படும்.

முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின், கெமிக்கல் கலந்த ஆப்டர் ஷேவ் லோசன்களைப் பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும், எரிச்சலின்றியும் இருக்கும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதனால் முகம் பிரஷ்ஷாகவும், சுத்தமாகவும் பளிச்சென்று காணப்படும்.

கோடையில் முதலில் வறட்சியடைந்து கருமையாகும் ஒரு இடம் தான் கண்களுக்கு அடியில் உள்ள பகுதி. எனவே அவ்விடத்தில் தினமும் மில்க் க்ரீம் தடவி வந்தால், ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, கண்கள் அழகாக காணப்படும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top