↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது அறிவிப்பில் சிறந்த தமிழ்ப்படமாக 'குற்றம் கடிதல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். இந்த படம் குறித்து பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா கருத்து கூறுகையில், "பெரிய நட்சத்திரங்கள் இன்றி என்னுடைய இயக்கத்தில் வெளியான 'நிழல்கள்' அந்த காலத்தில் சூப்பர் ஹிட் அடைந்த வெற்றிப்படம். தற்போது அதேபோல் பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் உருவாக்கியுள்ள 'குற்றம் கடிதல்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடையும்.

தற்போது சினிமாவுக்குள் வரும் 50% புதிய இயக்குனர்கள் வரும்போது உலகத்தரத்துடன் கூடிய திரைக்கதையுடன் வருகின்றனர் என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா இந்த படத்தை எவ்வித காம்ப்ரமைஸும் செய்யாமல் இயக்கியுள்ளார். மனிதர்களை படைத்த பிரம்மனே இந்த படத்தின் கேரக்டர்களையும் படைத்தது போலவே எண்ணுகிறேன். இயக்குனர் பிரம்மா மட்டுமின்றி இந்த படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். உண்மையில் பிரம்மா என்னை விட சிறந்த படைப்பாளி என்பதில் சந்தேகம் இல்லை'

இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top