↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கமல்ஹாசனின் உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலினின் 'நண்பேண்டா, சிம்புவின் வாலு, மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி உள்பட பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக திட்டமிட்டிருக்கும் நிலையில்,  இந்த ஏப்ரல் ரேஸில் ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' படமும் இணைந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இந்த படத்தின் பின்னணி இசை உள்பட அனைத்து பணிகளையும் முழுவதுமாக முடித்துவிட்டதாக கூறப்படுகிறாது.

தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் இந்த படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக  இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சற்று முன் பதிவு செய்துள்ளார்.

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டேனியல் பாலாஜி, விவேக், டாப்சி,சதீஷ், காயத்ரி ரகுராம், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top