↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘கடவுளே… இவங்க அராஜகத்துக்கு யாராவது மங்களம் பாட மாட்டாங்களா?’ என்கிற குரல் படமெடுக்கிற எல்லா தயாரிப்பாளர்கள் மனசிலும் இருக்கிறது. உலகத்துலயே தூங்கிக்கொண்டே பயணம் செய்கிற ஒரு தொழிலாளிக்கு ‘ஸ்லீப்பீங் பேட்டா’ என்ற ஒன்றை ஏற்பாடு செய்து அதையும் தயாரிப்பாளர் பாக்கெட்டிலிருந்து பிடுங்கும் அராஜகர்களின் கூடாராமாக விளங்குகிறது பெப்ஸி அமைப்பு. சம்பளம் தனி, பேட்டா தனி, என்று கேட்டு வாங்கி ஏப்பம் விடும் இவர்கள் எழுதும் பொய் கணக்கும், கொடுக்கும் டார்ச்சர்களும் சொல்லி மாளாது. பல கோடிகள் வியாபாரமாகும் ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்களுக்கும் அதே சம்பளம், அதே பேட்டா. கொட்டாச்சி, வையாபுரி மாதிரி ஆட்கள் நடிக்கும் படத்திற்கும் அதே பேட்டா, அதே சம்பளம். இதுதான் இவர்களின் அராஜகம்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று கதறி கூக்குரல் இட்டு, கடைசியில் மவுனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள். பெப்ஸி தொழிலாளர்களுக்கு எதிராக பேசினால், தொழிலாளர் விரோத போக்கு என்று கட்டம் கட்டி விடுவார்களோ என்கிற அச்சத்திலும், எதிர்கால அரசியல் நம்ம கையில்தான் என்று நினைப்பதாலும், பெப்ஸி தொழிலாளர்களுக்கு சப்போர்ட் செய்கிறார்கள் பல வருங்கால சினிமா முதல்வர்கள்(?).
இந்த அராஜகர்களை எதிர்த்து முதன் முறையாக நீதி பெற்றிருக்கிறார் மன்சூரலிகான். இவர் என்ன பேசினாலும் அதை காமெடி லிஸ்ட்டில் கூட வைத்துக் கொள்வதில்லை சினிமாக்காரர்கள். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெறும் 27 ஓட்டுகள் மட்டுமே வாங்கிய மன்சூரலிகான், இந்த தீர்ப்பை பெற்றதன் மூலம் ஒரே நாளில் ஹீரோவாக உயர்ந்துவிட்டார் என்பதுதான் நிஜம்.
மன்சூரலிகானின் ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் ‘அதிரடி’ திரைப்படத்திற்கும், அல்லது அதன் பிறகு ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் எந்த ஒரு திரைப்படத்திற்கும், ‘பெப்ஸி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த இடையூறும் செய்யக்கூடாது. ராஜ்கென்னடி பிலிம்ஸ் எந்தத் தொழிலாளிகளையும் வைத்தும் வேலை வாங்கிக்கொள்ளலாம்.எந்த புதிய தொழிலாளிகளை வைத்தும் படத்தை ஆரம்பிக்கலாம், படத்தை முடிக்கலாம், ஷுட்டிங்நடத்தலாம். This is interim injection from High Court, CS.No. 169/2015, நீதியரசர் சுப்பையா இந்த ஆர்டரை வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் மன்சூரலிகான் என்ன சொல்கிறார்?
மௌமிதா சௌத்ரி ,பூவிஷா ,சஹானா ,மன்சூரலிகான் தயாரித்து, நடிக்கும் அதிரடி படத்தின் ஷூட்டிங்குக்கு பிப்ரவரி 27ம் தேதியிலிருந்து மார்ச் 27ம் தேதிவரைக்கும் ஒருமாதம் ஷெட்யூல் போட்டு, ஹீரோயினை வரவழைத்து, மும்பையில் இருந்து வில்லனை வரவழைத்து, லாட்ஜ்ல ரூம்போட்டு, ஒன்றரை மாதமாஅசெம்பள்பண்ணி, அட்வான்ஸ் கொடுத்து, காமிராக்கு, ஆர்ட் டைரக்டருக்கு, டைரக்டருக்கு எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்து, பெப்ஸிஆளைவச்சிட்டுத்தான் ஷுட்டிங்போனேன்.
120 பேர் வரைக்கும் ஷுட்டிங்போனோம், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில ஷுட்டிங். 27ம் தேதி சாங் ஷுட்டிங் , 28ம் தேதி 5.30 மணிக்கு ஷுட்டிங் வரமாட்டோம்னு பாய்காட்பண்றாங்க. யாரும் வரமாட்டோம், மன்சூரலிகான் மன்னிப்புக்கேட்கணும்னு சொல்றாங்க. நான் ஆயிரக்கணக்கான தொழிலாளிக்கு வேலை கொடுக்கறவன்.
மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து ராதாரவி ஷுட்டிங்கில கேரவன் கேட்டாங்க. மேக்கப்மேனுக்கு தனி கார் வேணும், காஸ்ட்டியூமருக்கு தனிகார் வேணும், அதெல்லாம் முடியாது, உங்க காசுல தனியாவாங்கிக்குங்க.8000,10,000ம்னு வாங்கறீங்க, 50,000, 75000ம்னு சம்பளம் கொடுக்கறேன், மேக்கப்புக்கு ஆள் சரியா இருக்கு, புரொடக்ஷனுக்கு ஆள் கம்மியா இருக்குன்னு புரொடக்ஷன் ஆளுங்களுக்கு போன் போட்டு வரவச்சாங்க. அவங்க தயாரிப்பாளரா என்னைபார்த்திருக்கணும், நான் தொழிலாளர்அமைப்புக்கு எதிரானவன் கிடையாது. நான் பெப்ஸி அமைப்புல பல வருஷம் இருந்திருக்கேன்.நான் ஒரு டான்சர், டான்ஸ் மாஸ்டர் கார்டு வச்சிருக்கேன்.சினி டான்சர், சினி டான்ஸ் மாஸ்டர் அசோசியேஷன்ல மெம்பரா இருக்கேன்.சினி மியூசிஷியன்ல மெம்பர்.ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்ல லைப்மெம்பர், ஆர்ட்டிஸ்ட் அன்ட் டப்பிங் யூனியன்ல மெம்பர், 1988ல இருந்து,தயாரிப்பாளர் சங்கத்துல மெம்பர், பிலிம் சேம்பர்ல மெம்பர், நான் பெப்ஸி அமைப்பைச்சேர்ந்தவன்.
தலைமையில் உள்ள சில புல்லுருவிகள் தவறான வழிகாட்டி, அவங்க சுயநலத்துக்காக என்னை தப்பா பணியவைக்கப் பார்த்தாங்க, நான் பணிஞ்சிபோறவன் கிடையாது.சிவா, நடிகர்சங்கத்துல ராதாரவியோட வலதுகை, இடதுகைன்னு சொல்லப்படற கே.ஆர்.செல்வராஜ் செக்ஷன்ல இருக்கலாம்.அவர்கிட்ட பேசச்சொன்னாங்க. நான் எதுக்குப் பேசணும், நான் பேசமாட்டேன்னு சொன்னேன்.சிவா கிட்ட பேசச்சொன்னாங்க, சரின்னு காலையில 5.30 மணிக்கு போன் அடிச்சி சிவா கிட்ட பேசினேன்.அன்னைக்கு எனக்கு தொண்டை ரொம்ப கம்மியிருந்தது.கேட்டாரு, மன்சூரலிகான் பேசறன்னன், அப்படியே போனை வச்சிட்டாரு, அதுக்கப்புறம் அவர் எடுக்கவேயில்லை.
அதுக்கப்புறம் நான்எல்லா ஆர்ட்டிஸ்ட்டையும் பேக்பண்ணி அனுப்பிட்டு, அன்னைக்கு ஷுட்டிங்கேன்சல், அதுக்கு நஷ்டஈடு 25 லட்சரூபாய் கேட்டிருக்கேன்.அதுக்கான எல்லா செலவினங்களையும் நீதிமன்றத்துல தாக்கல் பண்ணியிருக்கேன்.அது கேஸ் நடந்து முறைப்படி அவங்க இழப்பீடுதந்தே ஆகணும், நான் விடமாட்டேன்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top