↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம் என இரண்டு வெற்றி படங்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் அவர் நடித்த மூன்றாவது படமான 'இந்தியா பாகிஸ்தான்' ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்தில் கமல்ஹாசனின் உத்தம வில்லன் உள்பட பல திரைப்படங்கள் வெளிவர திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தான் படமும் ஏப்ரல் ரேஸில் இணைய  திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான 'விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்' தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்திடம் இருந்த இந்த படத்தின் உரிமையை பெற பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதுகுறித்த தகவல்கள் இன்னும் இரண்டொரு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி, ஜெகன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். ஓம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு தியாகராஜன் எடிட்டிங் செய்துள்ளார். 

இந்த படத்தை தவிர விஜய் ஆண்டனி திருடன், சைத்தான், பிச்சைக்காரன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top