↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பெண்கள் எப்படி தங்களை அழகாக வெளிக்காட்ட புருவங்களை ட்ரிம் செய்தல், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்றுகிறோர்களோ, அதேப் போல் ஆண்கள் தங்களின் அழகை அதிகரித்துக்காட்ட, ஷேவிங் செய்வார்கள். ஆனால் சில ஆண்களுக்கு எப்படி சரியான முறையில் ஷேவிங் செய்வதென்றே தெரியாது. இதனால் பலரும் ஷேவிங் செய்த பின்னர் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஆண்கள் பொதுவாக ஷேவிங் செய்யும் போது ஒருசில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதன்படி நடந்தால், ஷேவிங் செய்த பின்னர் முகம் மென்மையாகவும், பிரச்சனையின்றியும் இருக்கும். இங்கு சரியான வழியில் ஷேவிங் செய்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, அழகான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறுங்கள். 

ஷேவிங் செய்யும் முன், முகத்தை சுடுநீரில் கழுவி, துணியால் துடைக்காமல் அப்படியே விட வேண்டும். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து, ஷேவிங் செய்யும் போது ஈஸியாக முடி வெளிவந்துவிடும்.

பின் ஷேவிங் ஜெல்லை முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஷேவிங் க்ரீம் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, ஷேவிங் செய்யும் போது முடி எளிமையாக வெளிவரவும் உதவும். ஒருவேளை உங்களுக்கு தாடி அதிகம் இருந்தால், ஷேவிங் க்ரீமை அதிகம் தடவி ஊற வையுங்கள்.

அடுத்து ஷேவிங் மிஷின் கொண்டு, வளைவுகள் அதிகம் உள்ள இடங்களில் ஷேவிங் செய்யாமல், முதலில் மேடு பள்ளங்கள் இல்லாத கன்னங்களில் ஷேவிங் செய்ய வேண்டும், இதனால் கடினமான இடங்களில் உள்ள முடி ஷேவிங் க்ரீம்மில் நன்கு ஊறி, ஷேவிங் செய்யும் போது பின் ஈஸியாக வந்துவிடும். இதனால் சருமத்தில் எவ்வித வெட்டுக் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.

ஷேவிங் செய்து முடித்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகள் திறக்கப்படும். பின் ஷேவிங்க்கிற்கு பிறகு தடவ வேண்டிய ஜெல் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தடவி, சருமத்தில் ஈரப்பசையூட்டினால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். முக்கியமாக நீங்கள் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ்வில் ஆல்கஹால் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆல்கஹால் கலந்த பொருட்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.

முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top