கேள்வி: உன்னை கொடு என்னை தருவேன் படத்தின் தோல்விக்கு காரனம் என்ன?
பதில்: வாலி, அமர்க்களம் போன்ற படங்களின் வெற்றிக்கு எப்படி நானும் ஒரு காரனமோ? அதுமாதிரி உன்னை கொடு என்னை தருவேன் படத்தின் தோல்விக்கு நானும் ஒரு காரனம்தான்.
இந்த படத்தோட இயக்குநர் கவி காளிதாஸ் நல்ல திறமையானவர்தான். அவருக்கு இதுதான் முதல் படம், அவர் சொன்ன கதை எனக்கு பிடிச்சுருந்ததால ஒத்துக்கிட்டேன். முதல் படம் என்பதால கதையை எப்படி ரசிகர்களை ஏத்துக்க வைக்கரதுன்னு தெரியாமல் போயிருக்கலாம்.
சில காட்சிகளில் நடிக்கும் போது எனக்கும் சந்தேகம் இருந்துச்சு. ஆனால் புதுமுக இயக்குநர்களை அஜீத் டார்ச்சர் பன்னுறான்னு ஒரு வதந்தி இருந்த சமயமாதலால், நானும் எதிலயும் தலையிடாம என்னோட வேலையை மாத்திரம் செஞ்சேன்.
மேலும் என்னோட திருமண நேரம் என்பதால, எனக்கு அதுக்கான நேரமும் இல்லை. தான் வெற்றியடையனமுன்னு நினைக்காத மனிதன் யார் இருக்க முடியும்? அது போலவே தான் கவி காளிதாசு வெற்றியடையனுமுன்னு நினைச்சு கஷ்ட பட்டு படம் எடுத்தார். ஆனால் அது ரசிகர்களிடம் அவர்கள் ஏத்துக்கும் அளவுக்கு போகலை. ஆனாலும் இந்த படம் மூலமா கிடைச்ச அனுபவம் எனக்கும் இயக்குநருக்கும் நல்ல பாடம்.
கேள்வி: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்துல உங்க கேரக்டரை முன்னிலை படுத்தவே இல்லைன்னு உங்க ரசிகர்கள் வருத்த பட்டாங்களே?
பதில்: இந்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்கும் போது நான் முன்னனி நடிகன் இல்லை. கால்ஷீட் கொடுத்த பின்ன ரொம்ப நாளைக்கு பின்னதான் ஷீட்டிங் போனோம். படம் எடுக்க தொடங்கும் போது, எனக்கு மார்கெட் வந்துட்டதால முக்கியம் இல்லாத கேரக்டரில் நடிக்க மாட்டேன்னு சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. என்னை பொருத்த வரைக்கும் அந்த படத்தில் என் ரோல் எனக்கு ஓகேதான்.
முன்னனி நடிகர்களான மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, போன்றவர்களுடன் நடிச்சது, ராஜீவ் மேனன் இயக்கதில் நடிச்சது, ரகுமான் இசை.., இந்த படத்தில் வேலை பார்க்கும் போதுதான் எனக்கு திருமணமும் நடந்தது.., படத்தின் பாடல்கள் ரிலீசான நிகழ்ச்சியில் அஜீத்தில் நான் என்னையே பார்க்கிறேன்னு கமல் சார் பெருமையா சொன்னது………எல்லாமே நல்ல அனுபவம்தான்…
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.