↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பாய் பிரண்டுடன் டேட்டிங் போவது ஒன்றும் அவ்வளவு பாவமான செயல் இல்லை என்பது போல் ஹீரோயின்கள் அவ்வப்போது பாய்பிரண்ட்களுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சிலர் இதுபற்றி பகிரங்கமாக ஒப்புக் கொண்டாலும் சில ஹீரோயின்கள் பாய்பிரண்டா? எனக்கா? யார் அவர்? என்று அப்பாவி போல் கேட்கிறார்கள். டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே.
இந்தியில் ‘சோர் இன் த சிட்டி‘ படத்தில் துஷார் கபூருடன் ஜோடியாக நடித்தார். இதில் நடித்த போது துஷாருடன் ராதிகா ஆப்தேக்கு நட்பு ஏற்பட்டதாம். அப்போது முதல் இருவரும் ஜோடியாக சுற்றுவதாக கிசுகிசுக்கப்படுகிறது. பாய் பிரண்ட் துஷாருடன் டேட்டிங் செல்வது பற்றி ராதிகா ஆப்தேவிடம் கேட்ட போது, ‘சோர் இன் த சிட்டி ஷூட்டிங் முடிந்ததும் நான் லண்டன் சென்று விட்டேன். துஷாருடன் நான் டேட்டிங் செல்கிறேன் என்பதில் உண்மை இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவருடைய போன் நம்பர் கூட என்னிடம் கிடையாது. இதுபோன்ற வதந்தி எப்படி வருகிறது என்றே தெரியவில்லை‘ என்றபடி முறைக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment