↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி, அர்ஜென்டினாவின் சான் லாரன்சோ அணிகள் மோதின.
அபாரமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் அணி சார்பில் ரமோஸ் (37வது நிமிடம்), பாலே (51வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.
இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி, கழக அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண தொடரில் முதன்முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தவிர, இத்தொடரில் கிண்ணம் வென்ற 9வது அணி என்ற பெருமை பெற்றது.
இத்தொடரில் ஸ்பெயினின் பார்சிலோனா (2009, 11), பிரேசிலின் கோரின்தியன்ஸ் (2000, 12) அணிகள் தலா 2 முறை கிண்ணம் வென்றன.
சாவ் பாலோ (2005), இன்டர்னாசியோனல் (2006), மிலன் (2007), மான்செஸ்டர் யுனைடெட் (2008), இன்டர்னாஜியோனல் (2010), பேயர்ன் முனிக் (2013) தலா ஒரு முறை கிண்ணத்தை வென்றுள்ளன.
கழக அணிகளுக்கு இடையிலான 11வது ‘பிபா’ உலகக்கிண்ண கால்பந்து தொடர் மொராக்கோவில் நடந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top