அப்படி இருக்கும்போது அவரது இமேஜை பாதிக்கும் வகையில் இந்த தலைப்பு வைத்தால் பெண் ரசிகைகள் படம் பார்க்க வரமாட்டார்கள் என நயன்தாராவிடம் அவருக்கு நெருங்கியவர்கள் சுட்டிக்காட்டினார்களாம். இதையடுத்து படத்துக்கு தலைப்பு மாற்றும்படி நயன்தாரா டைரக்டருக்கு உத்தரவு போட்டிருக்கிறார். இதையடுத்து உடனடியாக பெயரை மாற்றிவிட்டார் இயக்குனர். படத்தில் நயன்தாரா கேரக்டர் பெயர், மாயா. அதனால் அதே பெயரை வைத்திருக்கிறார்கள். ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்தபோது அந்த கேரக்டருக்கும் மாயா என்ற பெயரே வைக்கப்பட்டது. அந்த படம் ஹிட்டானதால் அதே பெயரை இந்த படத்தில் பயன்படுத்தலாம் என நயன்தாராதான் டைரக்ட ருக்கு ஐடியா கொடுத்தாராம். இப்போது அதையே படத்துக்கு தலைப்பாகவும் சூட்டிவிட்டார்கள் என்கிறது படக்குழு.

0 comments:
Post a Comment