↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜீவா டூரிங் டாக்கீஸ் படத்துக்காக இரண்டு பாடல்கள் பின்னணி பாடியுள்ளார்.
ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் யான். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் ஜீவாவுக்கு தோல்வியை கொடுத்தது. இதனால் அவருக்கு புதிய படங்கள் எதுவும் அமையவில்லை. பொறுத்துப் பார்த்த ஜீவா வேறுவழியில்லாமல் தனது மனைவி நடத்தி வரும் ஹோட்டலில் கவனத்தை திருப்பியிருக்கிறாராம்.
இந்நிலையில் ஜீவா பின்னணி பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். புதுமுகங்கள் வைத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி வரும் படம் டூரிங் டாக்கீஸ். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக தான் இளையராஜா இசையில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் ஜீவா. எந்தப் படமே இல்லாமல் இருக்கும் தன்னை இளையராஜாவின் இசையில் பாட வைத்திருப்பது ஜீவாவுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.
அதுமட்டுமல்லாமல் சினிமாவில் தான் முதன் முதலாக பாடியிருப்பதை தனது நெருக்கமானவர்களிடம் சொல்லி கொண்டாடியும் வருகிறாராம். இதனிடையே ஜீவா தனது தந்தையான ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதற்கான கதை விவாதத்தை அவர் ஏற்கெனவே தொடங்விட்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top