↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான சார்மி அதன் பின்னர் 'ஆஹா எத்தனை அழகு, லாடம் போன்ற தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று நடத்திய டாக் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட சார்மியிடம் 'நீங்கள் இதுவரை எந்த நடிகையை மேக்கப் இல்லாமல் பார்த்ததே இல்லை' என்று கேட்ட ஒரு கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் சார்மி கூறிய நடிகை இலியானா.

அதுமட்டுமின்றி அப்படி யாராவது இலியானாவை மேக்கப் இன்றி பார்த்தால் உடனே அவரிடம் மேக்கப் பாக்ஸை எடுத்து கொடுத்து மேக்கப் போட்டுவிட்டு வெளியே வாருங்கள்' என்று கூறிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். இலியானா குறித்த இந்த சர்ச்சை கருத்துக்கு இலியானா தரப்பில் இருந்து அதிரடி பதில் வரும் என டோலிவுட் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆர் நடித்து கிருஷ்ணவம்சி இயக்கிய  "ராக்கி" என்ற படத்தில் சார்மியும், இலியானாவும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சார்மி தற்போது விக்ரம், சமந்தா நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top