↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஆர்யா, ஹன்சிகா நடிப்பில் உருவான 'மீகாமன்' திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிப்பு செய்திருந்த நிலையில் திடீரென அந்த படத்தின் வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜெபக் தயாரித்த வன்மம் திரைப்படத்திற்காக செட்டில் செய்ய வேண்டிய தொகை இன்னும் நிலுவையில் இருந்ததால் மீகாமன் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், இந்த சிக்கலை தீர்க்க ஆர்யா முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளரின் இக்கட்டான நிலையை புரிந்து கொண்ட ஆர்யா, தன்னுடைய சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்துகொண்டதோடு, படம் ரிலீஸ் ஆவதற்கு தேவையான பணத்தையும் கொடுத்து உதவ முன்வந்துள்ளதாகவும், இதனால் மீகாமன் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாவது உறுதி என்றும் கூறப்படுகிறது.

தடையற தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ஹன்சிகா, ஆசிஷ் வித்யார்த்தி, சஞ்சனா சிங், மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top