↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தில் இடம்பெறும் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் கோவையில் வெற்றிகரமாக படமாக்கப்பட்டு முடிந்தது. இந்த காட்சிகள் கிளைமாக்ஸில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. 

அடுத்தகட்டமாக படக்குழுவினர் ஒருசில காட்சிகளை படமாக்க நேபாளம் செல்லவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவே இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. அதற்கு முன்பு சமந்தா நடிக்கவுள்ள ஒருசில காட்சிகள் சென்னையில் படமாக்கபடும் என்றும், அதன்பின்னர் படக்குழுவினர் நேபாளம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வருகிறது. கோலிசோடா என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் மில்டன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top