↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜேர்மனியில் பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகளவில் வைக்கப்படும் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
2014ம் ஆண்டு முடிவுபெறவுள்ள நிலையில், 2014-ல் நடந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு பட்டியல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகளவில் வைக்கப்பட்ட பெயர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலில், பெண்கள் பெயர் பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்திருந்த மியா என்னும் பெயரை 2ம் இடத்திற்கு தள்ளிவிட்டு இந்தமுறை எம்மா என்னும் பெயர் முதலிடம் பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்தில் ஹன்னா என்ற பெயரும், 4வது இடத்தில் சோஃபியா என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதேபோல ஆண் குழந்தைகள் பெயர் பட்டியலில், பென் என்னும் பெயர் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பென் என்ற பெயர் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து லூயிஸ், பால், லூகாஸ், ஜோனாஸ் ஆகிய பெயர்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top