↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திரைப்பட நடிகைகளின் சம்பளம் கோடியை நெருங்கியும், தாண்டியும் உயர்ந்திருப்பதைபோல சின்னத்திரை சீரியல் நடிகைகளின் சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்தை நெருங்கியும், தாண்டியும் உயர்ந்திருக்கிறது. சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர் கோலங்கள் தொடருக்காக தேவயானி. நடிகர்களின் கோடி சம்பளம் போல இந்த ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம்தான் சின்னத்திரை நடிகைகளின் லட்சியம்.
அந்த வரிசையில் இப்போது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர் ராதிகா. சொந்த சீரியலில் நடிக்கும்போது ஒரு லட்சம் சம்பளத்தை சீரியலின் பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்வார். அதற்கு அடுத்த இடத்தில் குஷ்பு இருக்கிறார் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பெறுகிறார்.
ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், மதுமிதா, சங்கவி ஆகியோருக்கு சினிமா ஹீரோயின் அந்தஸ்து இருப்பதால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பெறுகிறார்கள். மகேஸ்வரி, பாரதி, ஸ்ருதி, ஷமிதா, சந்தோஷி, நிமா ஆகியோர் 25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள்.
சினிமா நடிகையாக இருந்தாலும் சற்று வயதாகிவிட்ட நளினி, சுதா சந்திரன், சேது அபிதா, சுஜீதா, ப்ரீத்தி, ஸ்ரீத்திகா ஆகியோர் 15 ஆயிரம் வாங்குகிறார்கள். வடிவுக்கரசி, ஸ்ரீலேகா, சாந்தி வில்லியம்ஸ், வித்யா, வாணிபோஜன், மோனிகா மேக்னா, நிஷா, ஷப்னம் ஆகியோர் பத்தாயிரம் வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நடிகைகளின் சம்பளம் 15 முதல் 25 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment