சில தினங்களுக்கு முன் வெளிவந்த கத்தி திரைப்படம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் முதல் நாள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.இதில் கேரளா ரசிகர் ஒருவர் விஜய்யின் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து, கீழே விழுந்து உயிரை விட்டார். இதற்காக விஜய் தன் இறங்களை கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதில் ‘நேற்றைய கொண்டாட்டத்தில் மரணமடைந்த உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்மான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது பிரியமாக உள்ள ஒருவரின் இழப்பை ஈடுசெய்யவே முடியாது, அது எப்போதும் எனது இதயத்தில் இருந்து கொண்டேயிருக்கும். எனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், தீபாவளி போன்ற விழாக்காலங்களில், உங்களது ஆதரவை உங்களது உயிருக்கும் மற்றவர்களது உயிருக்கும் ஆபத்தில்லாமல் தெரிவியுங்கள்.
தகுந்த பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருங்கள், இல்லையென்றால் இது போன்ற சம்பவங்கள் தாங்கிக் கொள்ள முடியாத வலிகளை ஏற்படுத்தும்.உங்கள் மீதான உங்கள் மரியாதைதான் என் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கான அடையாளமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
அப்போ கட்டவுட்டுக்கு பால் ஊத்தவேணாம் என்று ரசிகர்களை திருத்த இவருக்கு மனமில்லை... இப்பிடியான நடிகர்களுக்கு ஏன் இவ்வளவு மரியாதை கொடுக்கிறாங்களோ தெரியாது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.