↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
எதிர்வரும் திங்கட்கிழமை கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சிக் கட்டமைப்புக்களிற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் ரொறன்ரோவிலும் அதனையண்டிய பகுதிகளும் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தொகுதிகளில் வாழும் தமிழ் வாக்காளர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதால் தமிழர்களிற்கு தங்களின் வாக்குச் சென்றடைய வேண்டுமென்று விரும்பினால் வேட்பாளரின் வாக்குறுதிகள், அந்த வேட்பாளரின் தனிநகர் ஆளுமை மற்றும் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு போன்ற காரணிகளை அலசி ஆராய்ந்து தங்களின் வாக்குக்களை இடலாம் என கனடாவிலுள்ள ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
இத்தேர்தல் குறித்து லங்காசிறி வானொலி நடாத்திய விசேட செவ்வி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், ( video here )
இந்த உள்ளூராட்சியமைப்புக் கட்டமைப்பில் தேர்தலிற்குப் போட்டியிடுபவர்கள் எந்தக் கட்சி சார்பாகவும் போட்டியிடுபவர்களாக இல்லாது தங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். எனவே தனிநபர் சார்ந்த பிரச்சாரங்களும் பிரச்சார யுக்திகளுமே முன்னிலைப்படுத்தப்படும்.
ஒரு வாக்காளர் தனது பிரதேசத்திற்கான உள்ளூராட்சிக் கட்டமைப்பில் உள்ள கல்விச் சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், மாநகர முதல்வர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கும், சில பிரதேசங்களில் வதிபவர்கள் தங்களின் மாநகர எல்லைக்குட்ட மேற்படி மூன்று பிரதிநிதிகளிற்கும் மேலாக பிராந்திய உறுப்பினர் ஒருவரையும் தெரிவு செய்யலாம்.
ஒரே பதவிக்காக ஒரே வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களிடையே தனிநபர் காழ்ப்புணர்வு, மற்றும் சுய விருப்பு வெறுப்பற்ற நேர்மையான போட்டி இருப்பது ஆரோக்கியமானதாக இருக்கும். அப்படியானதொரு போட்டியைத் தான் கனடியத் தமிழ் மக்கள் இந்த வேட்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள்.
போட்டியிடும் தமிழர்களில் ஆகக்குறைந்தது மூன்று இடங்களைக் கைப்பறினாலேயே அது வெற்றி. நான்கு இடங்களைத் தக்க வைத்தால் ஆராக்கியமான வெற்றி, ஐந்து இடங்களைக் கைப்பற்றினால் அது தமிழர்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலதிக விபரங்கள் அறிய .
Home
»
news
»
news.srilanka
» கனடிய உள்ளூராட்சித் தேர்தல்: 30க்கு மேற்பட்ட தமிழர்கள் போட்டி (வீடியோ உள்ளே )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment