↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

டிசம்பரில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது தல55 படம். இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கியிருக்கிறது. இப்படத்தின் சம்பந்தமான புது புதுச்செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது ஹிரோ அஜித் வில்லன் அருண் விஜய்யை பாராட்டிய செய்தி வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பில் அஜித்துடன் மோதும் காட்சி படமாக்கிய கௌதம் மேனன். படப்பிடிப்பு இடைவெளியில் அஜித்தும், அருண் விஜய்யும் நீண்ட நேரம் பேசுகிறார்களாம். அப்படி ஒரு சமயத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது உங்க உடம்பை அட்டகாசமா வெச்சிருக்கீங்க, உங்க உடம்பை கச்சிதமா வச்சிட்டிருக்குறத பார்த்த எனக்கும் தினமும் ஜிம்முக்கு போகனும்னு தோணுது என்று கூறினாராம் அஜித்.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆரம்பம் படத்திற்கு அடுத்து அஜித்தை வைத்தே மீண்டும் இப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார் ஏ.எம்.ரத்னம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top