இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி ரீமேக்கில் நடித்த நயன நடிகைக்கு பெருத்த ஏமாற்றம் கிடைத்தது. படம் ஓடவே இல்லை. தமிழில் வந்த சுவடே தெரியவில்லை. ஆனாலும் இன்னும் தான் ஒரு வித்யபாலனாகவும், விஜய சாந்தியாகவும் மாற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு போகவில்லை போல.
கஹானி படம் நயனத்துக்கு கை கொடுக்காததால், மீண்டும் தனது வழக்கமான ரூட்டுக்கே திரும்பினார். சிங்கிள் ஒருவன், பிரெண்டுடா போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயனம்.
இந்த நேரத்தில், சமீபத்தில் தன்னிடம் கதை சொல்ல வந்த சில புதுமுக டைரக்டர்களிடம், 10 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக மரத்தை சுற்றி டூயட் பாடி எனக்கு போரடித்து விட்டது. அதனால் என்னை மையப்படுத்தி கதை பண்ணிவிட்டு வாருங்கள் என சைடு கேப்பில் ஹீரோக்களை மரம் என கூறிவிட்டார்.
முக்கியமாக இரண்டு சண்டை காட்சிகளாவது இருக்கும் படியாக கதை பண்ணுங்கள், அப்படி நீங்கள் கதையுடன் வந்தால் கேட்டபடி கால்சீட் தருகிறேன் என கூறியுள்ளாராம்.
கவர்ச்சியாக நடிக்க கால்சீட் கேட்க சென்றவர்கள், இப்படி கதையையே மாற்ற சொல்கிறாரே என்ன செய்வது என்பது புரியாமல் தயாரிப்பாளர்களிடம் நயனத்தின் விருப்பத்தை கூறி வருகின்றனர்.
ஆனால் அந்த படத்தின் அதிர்ச்சி தோல்வியை மனதில் கொள்ளும் தயாரிப்பாளர்கள் நனத்தை வைத்து எப்படி எடுப்பது என ஒதுங்கிவிடுகின்றனராம்.
see this too...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.