தடைகளைத் தாண்டி விஜய் நடித்த ‘கத்தி’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. கேரளாவில் மட்டும் சுமார் 200 திரையரங்குகளுக்கு மேல் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
கேரளாவில் விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. கேரளாவிலும் ‘கத்தி’ திரைப்படம் ரயில், பஸ் என பல விதங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது.
இன்று காலை கேரளாவில் உள்ள வடக்கஞ்சேரி என்ற ஊரில் ‘கத்தி’ படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த ஒரு ரசிகர் படம் பார்த்து முடித்ததும் அங்கிருந்த பல அடி உயரம் கொண்ட ‘கத்தி’ படத்தின் மிக உயரமான பிளக்ஸ் பேனர் ஒன்றின் மீது சாரம் வழியாக ஏறி பாலாபிஷேகம் செய்ய முற்பட்டுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி விழுந்து மரணம் அடைந்துள்ளார். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயன்றவர் விஜய்யின் தீவிர ரசிகரான உன்னி என்கிற 24 வயது இளைஞராம்.
எதிர்பாராத இந்த விபத்தால் விஜய் ரசிகர் மரணமடைந்த விவகாரம் கேரளாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் மட்டுமே ரசிகர்களின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று வந்தது, தற்போது கேரளாவிற்கும் பரவி, அங்கு ஒருவர் உயிரைப் பறித்த கொடுமையை என்னவென்று சொல்வது…
இனியாவது, நமது ஹீரோக்கள் இப்படி பாலாபிஷேகம் செய்வதற்கும், மிக உயரமான பிளக்ஸ் போன்றவற்றை வைப்பதற்கும் அவர்களது ரசிகர்களுக்கு தடை விதிப்பார்களா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது
0 comments:
Post a Comment