தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் அனைத்து நடிகர்களும் நட்புடன் பழகி வருகின்றனர். ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ் என போட்டியாக இருந்தவர்கள் கூட இன்றைய சூழ்நிலையில் ஒரே மேடையில் சிரித்து பேசி ஈகோவை மறந்து நட்பு பாராட்டுகின்றனர்.
இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே நட்பாக இருந்தவர்கள் ஆர்யா, ஜெயம் ரவி, விஷால், ஜீவா. ஆனால் சில நாட்களாகவே இவர்கள் கேங்கில் ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்.அவர் வேறு யாரும் இல்லை ஜெயம் ரவி தான். சமீப காலமாக இவர் எங்கும் இவர்களுடன் பார்ட்டிக்கு தான் செல்வது இல்லையாம், ஷுட்டிங் முடிந்தால் நேராக வீட்டிற்கு தான் செல்கிறாராம்.
நன்றாக இருந்த இவர்கள் நட்பிற்குள் யார் கண் பட்டதோ என்று அனைவரும் இவர்களுக்காக வருத்தப்பட்டு வருகிறார்களாம்.
0 comments:
Post a Comment