↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா முன்னணி கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் மும்பை மருத்துவமனைக்கு ரகசியமாக வருகை தந்ததாகவும், அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பது புரியாத புதிராக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனுஷ்கா ஷர்மாவின் வருகையை அந்த மருத்துவமனையில் இருந்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதால் பாலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியுடன் விராத் கோஹ்லியின் காதலி என்ற உரிமையுடன் இந்திய கிரிக்கெட் போர்ட் அனுமதியுடன் அனுஷ்கா ஷர்மாவும் இங்கிலாந்து சென்று விராத் கோஹ்லியுடன் தங்கினார் என்ற செய்தி வெளிவந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இங்கிலாந்து டூரின் போது ஒரே அறையில் தங்கியிருந்த அனுஷ்கா ஷர்மா-விராத் கோஹ்லி காதல் ஜோடி, டூர் முடிந்த சில நாட்களில் இருவரும் ரகசியமாக மும்பை மருத்துவமனைக்கு வந்து சென்றது பல சந்தேகங்கங்களை கிளப்பியுள்ளதாக மும்பை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை திருபானி அம்பானிக்கு சொந்தமான மருத்துவமனைக்கு வந்த அனுஷ்கா ஷர்மா வெள்ளை நிறத்தில் பேண்ட் மற்றும் நீலக்கலர் கலந்த டாப்ஸ் அணிந்திருந்தார் என்றும், விராத் கோஹ்லி பிங்க் நிற ஷர்ட்டும் பேகி பேண்ட்டும் அணிந்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இவர்கள் வருகை குறித்து தகவல் கூற மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. Video here

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top