5000 திரையரங்குகளில் வெளியான பாங்க் பாங்க் திரைப்படமே முதன்நாளில் 27.50 கோடிகள் வசூலிக்க 1500 திரையரங்குகளில் வெளியான கத்தி திரைப்படம் மட்டும் எவ்வாறு 23.80 கோடிகளை முதன்நாள் வசூலிக்க முடியும். பொதுவா விஜய் படங்கள் என்றாலே இது போன்ற காமெடிகளுக்கு பஞ்சமில்லை. சுறா, வேட்டைக்காரன் படங்களுக்கே சக்சஸ் மீட்டிங் வைத்தவர்கள் இந்த விஜய் தரப்பினர். பொதுவாக இவ்வாறான கேலிக்கூத்துகளை விஜய் தரப்பே மேற்கொள்ளும்.
ஆனா இந்தமுறை விஜய் பட பித்தலாட்டத்தின் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சியாக விஜய் பட இயக்குனரே களத்தில் இறங்கிஇருக்கிறார். பன்றியுடன் சேர்ந்த பசுவும் **** தின்னும் என்பதுபோல, என்னதான் ஜென்டில்மானா இருக்கும் தயாரிப்பாளர், இயக்குனர், சக நடிகர்களும் விஜய் படத்தில் பணியாற்றினா விஜய்க்குரிய எல்லா கேவலமான குணங்களும் அவர்களுக்கு தொற்றிவிடும். இதை விஜய்க்கு ஜால்ரா அடிக்கணும் என்று செய்கிறார்களா? இல்ல, விஜய் தரப்பின் நெருக்கடியால் செய்கிறார்களா என்பதுதான் புரியாத புதிர்....
கத்தி திரைப்படமானது பார்த்தவர்களின் கருத்திப்படி வழமையான விஜய் படமில்லை, குறிப்பாக துப்பாக்கி,போக்கிரி, கில்லி போன்ற மாஸ் & மசாலா படங்களில்லை. முதல்பாதி ஆமை வேகத்தில் செல்வது, லாஜிக் இல்லாதா சீன்கள் படத்தின் பெரிய ஓட்டைகள். என்ன இரண்டாம் பாகம் ஓரளவு நன்றாக எடுத்ததாலும், சமூக பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி எடுத்ததாலும், பல தடைகளை தாண்டி இந்த படம் வெளிவந்தாலும் விமர்சகர்கள் பொசிட்டிவ்வான ரேட்டிங்கை கொடுத்திருக்கிறார்கள்(அதிலும் லைக்காவின் பணபலம் விளையாடியதா என்றது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்)
பொசிட்டிவ் விமர்சனம் படத்துக்கு வந்தாலும் உள்ளதை சொல்லப்போனால் இந்தப்படம் நடுநிலை ரசிகர்களை கவர்ந்தாலும் விஜய் ரசிகர்கள் பலரை கவரவில்லை என்பதுவே உண்மை. முதல் ஷோ பார்த்த பல ரசிகர்கள் குழம்பியவாறே இருந்தார்கள். அதன்பின் behindwoods போன்ற இணையத்தளங்களின் பொசிட்டிவ் விமர்சனங்களை பார்த்தே அவர்களும் கத்தி சூப்பர் கத்தி சூப்பர் எண்டு கத்த தொடங்கிவிட்டனர். எவ்வளவுகாலத்துக்குதான் வலிக்காதமாதிரியே நடிக்கப்போறார்களோ தெரியாது. நண்பன் படமும் விஜய் ரசிகர்களை கவராமையால்தான் போட்ட முதலுக்கு நோகாம அவரேஜ் ஹிட் ஆனது.
0 comments:
Post a Comment