↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நடிகைகள் பலர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க ஆர்வப்படுகின்றனர். நயன்தாரா, அனாமிகா, ஸ்ரீராமராஜ்ஜியம் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார்.
அனுஷ்காவும் ருத்ரமா தேவி, பாகுபலி போன்று தன் கேரக்டருக்கு முன்னுரிமை அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார். ஆனால் திரிஷா எண்ணம் இதற்கு நேர்மாறாக உள்ளது. இது போன்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார்.
இதுகுறித்து திரிஷா கூறியதாவது:–
படம் முழுவதும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கதாநாயகி தோளில் கதையை சுமக்க வைப்பதில் உடன்பாடு இல்லை. இது எனது சொந்த கருத்துதான்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் மறுத்து விட்டேன். இது போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது என்று எனக்கு தெரியும். இது மாதிரி படங்கள் 1980 கால கட்டத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். இப்போது அவை எடுபடாது. முழு நீள கமர்சியல் படங்களில் நடிப்பது எளிதானது. 20 நாட்களில் நடித்து முடித்து விடலாம். எனவேதான் கமர்சியல் கதைகளை நான் தேர்வு செய்து நடிக்கிறேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment