அரியானா மாநிலம் சோனிபட் கிராமத்தில் உள்ள கோஹனா நகரில் பான் கடை (பீடா கடை) நடத்தி வருபவர் ராஜேஷ். இவருக்கு அக்டோபர் மாதத்துக்கான மின் கட்டண பில்லை மின்சார வாரியம் அனுப்பியது.
பில்லை பார்த்த ராஜேஷூக்கு அதிர்ச்சியில் மயக்கம் வராத குறைதான். காரணம் மின் கட்டணம் ரூ. 132 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் ஒரு தடவை பில்லை சரியாக பார்த்தார். அதே தொகைதான் தெரிந்தது.
இது குறித்து ராஜேஷ் கூறுகையில், ''நான் ஒரு சிறிய கடைக்கு வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். ஒரு லைட் பல்ப் மற்றும் மின் விசிறி மட்டுமே பயன்படுத்துகிறேன். வழக்கமாக எனக்கு மின் கட்டணமாக மாதம் ரூ. 1,000 விட குறைவாக தான் வரும். இந்த பில்லை பார்த்ததும் எனக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது.
எண்ணில் தவறாக அச்சிட்டிருக்கலாம் என்று பார்த்தால் எழுத்திலும் அதே தொகையே அச்சிடப்பட்டுள்ளது. இது பற்றி மின் விநியோக வாரிய அலுவலகத்தில் புகார் செய்யவுள்ளேன்"" என்றார்.
அரியானாவில் இதற்கு முன்பு கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இதே போல் குளறுபடி நடந்தது. நார்நல் நகரை சேர்ந்த முராரி லால் என்பவரின் வீட்டு மின் இணைப்புக்கு ரூ. 234 கோடி மின் கட்டணமாக பில் அனுப்பி அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது மின்சார வாரியம்.
0 comments:
Post a Comment