இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் மோதும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி திடீரென ரத்து செய்ததால், இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்தப் போட்டிகள் கட்டாக், ஐதராபாத், ராஞ்சி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் வரும் நவம்பர் 2-14 வரை நடைபெறுகிறது.
மேலும் வரும் அக்டோபர் 30 ஆம் திகதி இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.
வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா அணியில் இடம் பெறவில்லை. அதேபோல், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுராஜ் ரந்தீவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள குமார் சங்கக்காரா ஒருவேளை தகுதி பெறவில்லை என்றால் நிரோஷன் டிக்வெல்லா அணிக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வீரர்கள் விவரம்:-
ஏஞ்சலோ மேத்யூஸ் (அணித்தலைவர்), குசல் பெரரே, டில்ஷான், உபுல் தரங்கா, குமார் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, அஷன் பிரியஞ்சன், நிரோஷன் டிக்வெல்லா, திஷரா பெரேரா, நுவன் குலசேகரா, தம்மிக்கா பிரசாத், லாகிரு காமேஜ், சதுரங்கா டி சில்வா, சேகூஜ் பிரசன்னா, சுராஜ் ராந்திவ்
|
மலிங்கா 'அவுட்': ஒருநாள் தொடருக்கு இலங்கை அணி அறிவிப்பு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.