கண்டிப்பாக ஒரு ஹிட் தேவை என்ற சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. இவர் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது மாஸ் என தலைப்பு வைத்திருக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் படத்தின் பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. இப்படத்தின் போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே இந்த போஸ்டர் குறித்து சில கருத்துகள் வெளியாகின். படத்தின் போஸ்டர் ஒரு ஆங்கில படத்தின் போஸ்டரை போல இருப்பதாக சொல்லி வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வெங்கட்பிரபுவின் ட்விட்டர் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் “மாஸ் படத்தின் போஸ்டர் குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார், படத்தின் போஸ்டரில் இருப்பது மக்ஷாட் எனப்படும் ஒரு கேமரா கோணம், இதை ஹாலிவுட்டில் பல படங்களுக்கு உபயோகித்திருக்கிறார், ஆனால் நாம் இங்கே அந்த மாதிரி போஸ்டர் வைத்தால், அதை எப்படி காப்பி என்று சொல்வீர்கள் என கேள்வி கேட்டுள்ளார் வெங்கட் பிரபு”.
ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்வது சுலபம். ஆனால் அந்த படத்தை உருவாக்குவதற்காக 100க்கும் மேற்பட்டோர் உழைக்கிறார்கள் என்று சிறிது நேரம் யோசித்தால் இப்படி ஒரு விமர்சனம் தமிழ் சினிமாவில் வராது. இதற்காகவே ஒரு குழுவை அமைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்றெல்லாம் தோன்றுகிறது சில நேரத்தில்…
என்ன கொடுமை சரவணன் இது..!
0 comments:
Post a Comment