↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் ஒருவழியாக தீபாவளி தினத்தில் பலவித தடைகளையும் தாண்டி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டும் இருக்கின்றது. கத்தி படம் கண்டிப்பாக ஹிட்தான் என்பதில் சந்தேகமில்லை. முதல் நாளே 15 கோடி சம்பாதித்துக்கொடுத்த இந்த படம் கண்டிப்பாக நூறு கோடியை தாண்டி வசூல் செய்யும். படத்தின் ரிசல்ட்டும் பாஸிட்டிவ்வாக வந்துள்ளதால், இந்த படத்தை தயாரித்தவர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கு நல்ல லாபத்தை கத்தி கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் நமது படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகள் திடீரென மெளனம் காத்து கத்திக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தியது ஏன் என்றுதான் இன்று வரை பொதுமக்களுக்கு புரியவில்லை.
'லைகா' நிறுவனத்தின் பெயரை எடுத்துவிட்டார்கள். அதனால் கத்திக்கு எதிரான போராட்டம் வாபஸ். இதுதான் தமிழ் அமைப்பாளர்கள் கூறும் காரணம் என்றால் நாளை இலங்கை அதிபர் ராஜபக்சே தனது பெயரில் ராஜபக்சே புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் விஜய் அல்லது வேறு யாராவது பிரபல நடிகர்களை வைத்து படமெடுத்தால் கூட, ராஜபக்சேவின் பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என்று இதே தமிழ் அமைப்பாளர்கள் ஒப்புக்கொள்வார்களா?
மேலும் விஜய் கடைசி நேரத்தில் அம்மாவுக்கு நன்றி என்று அறிக்கைவிட்டது ஏன் என்று அவரது நெருங்கிய சகாக்களுக்கே இன்னும் புரியவில்லையாம்? அம்மாவுக்கும் கத்தி படத்திற்கும் என்ன சம்மந்தம். அம்மா எப்போது இந்த பிரச்சனையை தீர்த்தார் என்பதை விஜய்தான் விரிவாக விளக்க வேண்டும்.
மேலும் 'கத்தி' திரைப்படம் கார்பரேட் கம்பெனிகளின் அராஜகத்தை தோலுரித்து காட்டும் ஆக்ரோஷமான கதை. ஆனால் இந்த படத்தை இயக்கிய முருகதாசும், இந்த படத்தில் நடித்த விஜய்யும் கார்பரேட் கம்பெனியை எதிர்ப்பவர்களா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
ஏ.ஆர்.முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் என்ற கார்பரேட் நிறுவனத்தினுடன் கூட்டணி அமைத்துதான் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, குக்கூ, முண்டாசுப்பாடி ஆகிய படங்களை தயாரித்தார். அந்த நிறுவனத்துடன் இணைந்துதான் லாபம் சந்தித்தார். மேலும் 'கத்தி' படத்தை தயாரித்த லைகா நிறுவனமும் கார்பரேட் நிறுவனம்தான். கார்பரேட் நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டணி அமைத்து பணம் சம்பாதிக்கும் முருகதாஸ், கார்பரேட் நிறுவனங்களை எதிர்த்து படம் எடுக்க தகுதி இருக்கின்றதா இல்லையா? என்பதை பொதுமக்களே முடிவு செய்யட்டும்.
கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு கோகோ கோலா கம்பெனியின் விளம்பரத்தில் நடித்து சம்பாதித்த விஜய், அதே கோலா நிறுவனத்திற்கு எதிரான ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது அதே பணத்திற்காகவா? என்பதையும் அவர் தனது மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளட்டும்.
விஜய் இந்த படத்தில் ஒரு கேரக்டர்தான், அவர் வெளிப்படுத்தியிருப்பது அந்த கேரக்டரின் நடிப்புதான். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஒரு கேள்வி. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வாழ்க்கை வரலாற்றை படம் எடுத்தால், அது ஒரு கேரக்டர்தான் என்று கூறி விஜய் நடித்தால் ஒப்புக்கொள்வார்களா?
Home
»
arm
»
cinema
»
cinema.tamil
»
vijay
» கார்பரேட் கம்பெனிகளை எதிர்க்கும் தகுதி விஜய்-முருகதாசுக்கு இருக்கின்றதா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment