↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எந்த ஒரு பெரிய கட்சியும் தனக்கு ஆதரவு கரம் நீட்டாத நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அளித்த வாழ்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாம். சொத்துக்குவிப்பு வழக்கில் தானே எதிர்பாராத வகையில் தீர்ப்பு கடினமாக இருந்ததால் அப்செட்டாகி சிறையில் இருந்தார் ஜெயலலிதா. 

அதிலும் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த தன்னை ஒரே நாளில் சிறையில் அடைத்துவிட்டார்களே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்ததாக கூறுகிறார்கள். எல்லாத் தேசியக் கட்சிகளிலும் தனக்கு பழக்கமானவர்கள் இருந்தும், எந்தக் கட்சியும் ஆதரவுக் குரல் கொடுக்கவில்லை. 

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளும் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தன. முதன்முதலில் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தபோது, தமிழகத்தில் அதிமுகவுடன்தான் கூட்டணி இருந்தது.

தேசிய அளவிலான பெரிய கட்சிகளை ஒதுக்கிவிட்டு, சில நேரம் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் கம்யூனிஸ்டுகளுக்கு கிடைப்பதற்கு உதவியியுள்ளார். அப்படியும், ஒருவர் கூட தீர்ப்பு பற்றி வாய் திறக்கவில்லை. தேசியக் கட்சிகள் மவுனமாக இருந்ததால் ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநில கட்சிகள் தினமும் அறிக்கை வெளியிட்டன. இது ஜெயலலிதாவுக்கு கோபத்தையே உண்டாக்கியது. 

"என்னோட கூட்டணி சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பெற்ற விஜயகாந்த் இப்போ அதிகமாக பேசுற நிலைமை உருவாகியிருக்கிறது. வெளியே வந்ததும் பார்த்துக்கலாம்" என சசிகலாவிடம் மனதிலுள்ளதை கூறினாராம், ஜெயலலிதா. 

இந்நிலையில் தமிழகம் திரும்பிய ஜெயலலிதாவுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஆறுதலையும் ஏற்படுதத்தியுள்ளதாம். எனவேதான் ரஜினிகாந்த் கடிதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள் போயஸ்கார்டன் வட்டாரங்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top