↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் 
“தமிழகத்தில் எதிர்ப்பின் காரணமாக ஓடவில்லையெனில் அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் மட்டும் வருமானம் இழப்பு ஏற்படும் அதைப்பற்றி கவலைப்படவில்லை, ஜெயா தொலைக்காட்சிக்கு இலவசமாக கொடுத்து விடுங்கள், அதுவும் இழப்பு இல்லை. நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை..” என்று சொன்னதாக இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு சென்றபோது தோழர்கள் சொன்னார்கள்.

இத்தனை இழப்புகளையும் தாங்கிக்கொண்டு ‘லைக்கா’ காரர் தமிழனுக்கு ‘கலைச் சேவை’ ஏன் செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்காவது புரிகிறதா?

கத்தி திரைப்படம், ஒருவேளை, 
“ முள்ளிவாய்க்காலில் சிங்களவன் எப்படி கொலை செய்தான் என்பதைப் பற்றி படமாக இருக்குமோ?.”... அல்லது 
“சித்தரவதை முகாமில் சிங்கள ராணுவத்தின் கொலைவெறியாட்டத்தினைப் பற்றி பேசி இருப்பார்களோ?”..அதனால் தமிழின் மீது பற்று கொண்டு தயாரிப்பாளர் பணம் நட்டமாவதைப் பற்றி கவலைப்படாமல் ‘கலைச் சேவை’ செய்ய வந்திருக்காரா?... 

அவர் 30 கோடி ரூபாய் நட்டமானாலும் தமிழகத்தில் கால் பதிக்க விரும்புகிறார். மானமே போனாலும் திரைப்படம் பார்த்து ”30 கோடி ரூபாய் நட்டத்தினை ஈடுகட்ட தமிழன் இங்கே உழைக்கப் போகிறான்”...தமிழனைப் பத்தி தமிழனுக்குதானே நன்றாக தெரியும். 

மத்திய அரசின் ‘இலங்கை-இந்தியா’ வர்த்தக புரிதல் கொள்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ‘சிங்கள அரசு’ தமிழகத்திற்குள் நுழைகிறது. பொருளாதார தடை என பெயரளவில் தீர்மானம் போட்ட அதிமுக அரசு மெளனம் காக்கிறது. அப்படத்தினை விலைக்கு/ இலவசமாக வாங்க அனுமதிக்கிறது. 

தமிழகத்தின் எந்த ஒரு போராட்டமும் அல்லது எதிர்ப்பும், அரசினை நம்பியோ, பெரிய ஆளும் கட்சிகளை நம்பியோ நடந்ததில்லை. 

தமிழரின் சுயமரியாதையும், போராட்ட உணர்வினையும் நம்பியே போராட்டங்கள் நடக்கிறது. 


சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் நமது சிறிய எதிர்ப்பினையாவது பதிவு செய்ய கைகோருங்கள்.

copied from- https://www.facebook.com/thirumurugan.gandhi/posts/10205075943681780

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top