↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய ஆர்யா-விஷ்ணுவர்தன் தற்போது ‘யட்சன்’ படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தில் விஷ்ணுவர்தனின் தம்பியும், நடிகருமான கிருஷ்ணாவும் நடிக்கிறார்.

இப்படத்தை யுடிவி நிறுவனத்துடன், விஷ்ணுவர்தன் தனது சொந்த நிறுவனமான விஷ்ணுவர்தன் பிலிம் பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஆர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதுதவிர்த்து, அஜீத் ரசிகராகவும் ஆர்யா நடிக்கிறாராம். மேலும், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறாராம். ஆர்யா, எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது.
காதல், மோதல் நிறைந்த ஜாலியான படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் தேவையான அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது…..

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top