↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


'நான்', சலீம்' படங்களை அடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'இந்தியா பாகிஸ்தான். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜொடியாக நடித்திருக்கும் பெங்களூரை சேர்ந்த சுஷ்மாராஜ், இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

'நான் கல்லூரியில் படிக்கும்போது வேட்டைக்காரன் பாடல்களை தினமும் கேட்பேன். எனது பேவரேட் பாடல்களில் ஒன்று 'நாக்கு முக்க' பாடல். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானபோது, அவர் ஒரு மியூசிக் டைரக்டர் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அவர்தான் நாக்கு முக்க' பாடலுக்கு இசையமைத்தவர் என்பது எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது.

அதன்பின்னர் நான் அவருக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கூறினேன். என்னுடைய வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட விஜய், வெட்கப்பட்டார்.

சென்னை, பொள்ளாச்சி, ஓமன் ஆகிய இடங்களில் இந்தியா பாகிஸ்தான்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், பாடல் காட்சிகளின் படப்பிடிப்புகளின்போது மிகவும் ரசித்து நடித்ததாகவும் சுஷ்மா ராஜ் மேலும் கூறினார். இவர் இன்னும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top