உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் வருகிற 14ம் திகதி தொடங்குகிறது.
கடந்த 2 மாத காலமாக அவுஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய அணி நேற்றைய பயிற்சிப் போட்டியில் தான் புதுமுக அணியான ஆப்கானிஸ்தானை 153 ஓட்டங்களில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
உலகக்கிண்ண தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வருகிற 15ம் திகதி எதிர்கொள்கிறது. ஆனால் இந்திய அணியில் விளையாடக் கூடிய 11 வீரர்களை தெரிவு செய்வதில் அணித்தலைவர் டோனியின் குழப்பம் தொடர்ந்தவாறு உள்ளது.
பவுலர்களை தெரிவு செய்வதில் தான் அவர் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளார். ஏனென்றால் பந்துவீச்சு தொடர்ந்து கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது.
இதனால்தான் பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பதில் அவர் தொடர்ந்து தடுமாறுகிறார். துடுப்பாட்ட வரிசை நேற்று சிறப்பாக இருந்தது.
ரெய்னா 4வது வீரராக களம் இறங்கியதற்கு பலன் கிடைத்தது. இதேபோல ரஹானே எந்த வரிசையிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். காயத்தில் இருந்து குணமடைந்த ரோஹித் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திருப்பியுள்ளார்.
நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோஹ்லியின் துடுப்பாட்டம் தொடர்ந்து கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று விளையாடிய வீரர்களே பாகிஸ்தானுடன் ஆட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நேற்றைய போட்டிக்கு பிறகு பேட்டி அளித்த டோனி, ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே வீரர்களின் தெரிவு இருக்கும் என்றும், பயிற்சி ஆட்டத்தை வைத்து எதையும் முடிவு செய்ய இயலாது எனவும் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment