'லிங்கா' இழப்பீடுத் தொகையில் விநியோகஸ்தர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே அளிக்க முன்வந்திருக்கிறார், அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.
'லிங்கா' தயாரிப்பாளர் தரப்பில் இருந்து நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பதை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 'லிங்கா' இழப்பு கணக்கு வழக்குகளை பார்த்த தயாரிப்பாளர், "இவ்வளவு நஷ்டமா... என்னால் மட்டுமே இதனை ஈடுகட்ட முடியாது" என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதேவேளையில், "இப்படத்தை என்னிடம் வாங்கிய ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஈராஸ் நிறுவனத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஈராஸ் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்களிடம் நஷ்ட ஈடு குறித்து எந்த ஒரு சாதகமான பதிலும் வரவில்லை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
அதே வேளையில், திரையரங்க உரிமையாளர்களிடம் தொடர் அழுத்தம் வருவதால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கும் சென்னையில் கூடி விவாதித்தார்கள்.
இந்நிலையில், இன்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இழப்பீடுத் தொகையில் 10 சதவீதம் மட்டுமே வழங்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
ஈராஸ் தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்பதால், தன்னால் 10 சதவீதம் மட்டுமே கொடுக்க முடியும். அதுமட்டுமன்றி நான் தமிழ்நாட்டுக்கு மட்டும் கொடுக்க முடியாது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என அனைத்து திரையுலகுக்கும் கொடுக்க இருப்பதால் 10 சதவீதம் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று திருப்பூர் சுப்பிரமணியத்திடம் வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.
இந்தத் தகவலை அனைத்து விநியோகஸ்தர்களுக்கும், திருப்பூர் சுப்பிரமணியம் தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது விநியோகஸ்தர்கள் 10 சதவீத நஷ்டஈடு தொகைக்கும் என்ன கூறவிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
0 comments:
Post a Comment