எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஏர் டிஃபென்ஸ் கால்பந்து மைதானத்தில் எகிப்தியன் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் சமலெக் மற்றும் இ.என்.பி.பி.ஐ. ஆகிய அணிகளுக்கிடையே போட்டி நடைபெற இருந்தது.
அந்த சமயம் திடீரென்று சமலெக் அணியின் ஆதரவாளர்களான 'அல்ட்ராஸ் ஒயிட் நைட்ஸ்' குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்காமல் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அவர்களை விரட்ட பொலிசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். இதில் ஏற்பட்ட நெரிசல், மூச்சுத் திணறலால் 30 பேர் பலியாயினர். 25 பேர் காயமடைந்தனர்.
மைதானத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனையடுத்து கால்பந்து போட்டி கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று 2012ம் ஆண்டில் எகிப்தின் போர்ட் செட் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 72 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment