↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற கிறைஸ்ட்சர்ச் நகரில் 14 நாட்டு அணி கேப்டன்களும் குவிந்திருந்தனர். குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் அணி கேப்டன்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ்: உலக கோப்பையை நாங்கள் வென்றதில்லை என்ற அவப்பெயர் தொடருகிறது. இம்முறை சிறப்பாக பயிற்சி பெற்று வந்துள்ளோம். கோப்பையை எங்கள் நாட்டுக்கு கொண்டு செல்வது உறுதி.
ஜிம்பாப்வே கேப்டன் ஹமில்டன் மசகட்சாச: சிறிய அணி, பெரிய அணி என்ற பாகுபாடு கிரிக்கெட்டுக்கு கிடையாது. அன்றைய நாளில் யார் சிறப்பாக ஆடுவார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
இலங்கை கேப்டன் ஆங்லோ மாத்யூஸ்: இந்த தொடர் மிகவும் கடினமாகவே இருக்கப்போகிறது. யார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் வெல்லலாம்.
நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம்: எனது சொந்த ஊரான கிறைஸ்ட்சர்ச் நகரிலேயே முதல் போட்டியை நியூசிலாந்து சந்திக்க உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து நாடுகளுக்குமே இந்த உலக கோப்பையில் நல்ல வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு விக்கெட்டுகள் திறமையானவர்களுக்கு களம் அமைத்து கொடுப்பவை. அனைத்து அணியிலும் அப்படி ஒரு திறமைசாலிகள் உள்ளனர். அவர்கள் பத்து அல்லது பதினைந்து ஓவர்களில் நிலைமையை மாற்றிவிடும் தகுதிபடைத்தவர்கள். இவ்வாறு கேப்டன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
Home
»
sports
»
sports.tamil
» அன்புப் பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே... தொடக்க விழாவில் உணர்ச்சிவசப்பட்ட மெக்கல்லம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment