இந்த போட்டித்தொடர் 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 8 ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
மும்மைபயில் நடைபெற்ற ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளை சென்னை, புனே ஆகிய இடங்களில் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடத்தப்படவில்லை.
டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். ஆட்டம் நடக்கிறது.
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் வேண்டுகோளுக்கு இணங்க புனேயிலும் போட்டி நடக்கிறது.
பஞ்சாப் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் அங்கு நடைபெறும். ஏற்கனவே அந்த அணியின் உள்ளூர் மைதானமான மொகாலியில் எத்தனை ஆட்டம் நடைபெறும் என்பது பற்றி தெரியவில்லை. அந்த அணி கடந்த காலங்களில் தர்மசாலா, கட்டாக்கில் விளையாடியது.
இதேபோல ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்களில் சில போட்டிகள் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடத்தப்படுகிறது.
0 comments:
Post a Comment