வாயில பூரானை வச்சுகிட்டு வழியெல்லாம் பூச்சிக்கடின்னு கோபப்பட்டால் எப்படி? ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு ஆதரவாக ட்விட் பண்ணுகிறேன் பேர்வழி என்று அந்த படத்தை விமர்சிக்க கிளம்பியவர்களையெல்லாம் ‘மென்ட்டல்’ என்று திட்டிவிட்டார் சிம்பு. ‘என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை கிடையாதா?’ என்று அவர் அதற்கப்புறமும் எரிகிற தீயில் எண்ணையை ஊற்ற, சந்து பொந்துகளில் இருந்தெல்லாம் சண்டைக்கு வந்துவிட்டார்கள். ‘அதெப்படி படம் புடிக்காதவங்களை மென்ட்டல்னு சொல்லலாம்?’ என்பதுதான் அவர்களின் ஆத்திரம்.
இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த நிலையில்தான் இன்று சென்னையில் நடந்த வெத்து வேட்டு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் ‘நெடுஞ்சாலை’ படத்தின் ஹீரோ ஆரி. தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முக்கியமானவராக கருதப்படும் இவர் படத்தை பற்றிதான் பேச ஆரம்பித்தார் முதலில். இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் தாஜ்நூர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்தவர். நான் நடிக்க முயற்சி செய்யுற நாட்களில் அவர் ஆபிஸ்லதான் இருப்பேன். சைனாவுல எந்த புராடக்ட் முதல்ல வந்தாலும், அதை இங்கு இறக்குமதி பண்ணிருவார். ரஹ்மான் சாருக்கு எப்படி விதவிதமா இன்ஸ்ட்ரூமென்ட் வாங்குறது புடிக்குமோ, அப்படிதான் இவரும். அவங்க வீட்ல போடுற க்ரீன் டீ க்கு நான் அடிமை என்றெல்லாம் பேசிக் கொண்டே போனவர், படத்தில் வரும் பாடல்களையும் பாராட்டிவிட்டு அந்த மெயின் விஷயத்துக்கு வந்தார்.
சினிமா நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவர் சிம்பு. என்னோட நெடுஞ்சாலை படத்திற்கு கூட அவர் ‘நல்லாயிருக்கு. அவசியம் பார்க்க வேண்டிய படம்’னு வாய்ஸ் கொடுத்திருந்தார். இப்போ ரீசன்ட்டா வந்த என்னோட தரணி படத்திற்கும் சிம்பு ஆதரவா ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அந்தளவுக்கு மற்ற தயாரிப்பாளர்கள் நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவர் அவர். என்னை அறிந்தால் படமும் அப்படி நல்ல முறையில் ஓடணும் என்பதற்காகதான் அப்படி சொல்லியிருப்பாரே தவிர, யார் மனசையும் நோகடிக்கணும்னு பேசுறவர் இல்ல அவர்.
அவர் கருத்தால் யாருக்கெல்லாம் வருத்தமோ, அவங்க எல்லாருகிட்டயும் நான் சிம்பு சார்பா மன்னிப்பு கேட்டுக்குறேன் என்றார் ஆரி. ‘இப்படி ஹீரோக்களுக்குள் நிலவும் மேன்மையான குணத்தை பாராட்டாதவங்க மென்ட்டலுன்னு நாம ஒரு ட்விட் போட்ருவோமா?’
0 comments:
Post a Comment