↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித் - த்ரிஷா ஜோடி ஜி, கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இதற்கு முன் நடித்திருந்தாலும்,என்னை அறிந்தால் படத்தில்,சத்யதேவ் - ஹேமனிகா வேடங்களில் இருவரும் வாழ்ந்து காட்டியிருந்தது, ரசிகர்களை ரொம்பவே வசீகரித்து விட்டது. 

இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி, செமத்தியாக ஒர்க் அவுட்டாகியுள்ளதாக சமூக வலைதளங்களில், இவர்களின் ரசிகர்கள் குதுாகலிக்கின்றனர். அதிலும்,பட்டுச் சேலை, பரத நாட்டியம், சோகம் கலந்த மென் சிரிப்பு என, த்ரிஷா, அழகு கேட்வாக் நடத்தியிருப்பது அழகோ அழகு என்கின்றனர், அவரின் ரசிகர்கள்.

ஏற்கனவே, த்ரிஷாவுக்காக,தியேட்டர்களில் கட் அவுட்,பாலாபிஷேகம் செய்து, பின் காணாமல் போன ரசிகர்கள்,ஹேமனிகாவின் வருகையால், மீண்டும் களத்துக்கு வரதயாராகியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top