↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ரசிகர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் அவசியம் இல்லை. அப்படி கேட்க ஆரம்பித்தால் அவ்வளவுதான் என்று கடுப்புடன் கூடினார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி. உலக கோப்பை கிரிக்கெட்டில், நாளை அடிலெய்டு மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. இதையொட்டி இன்று நடந்த செய்தியாளர்களை சந்தித்தார் டோணி. ஆனால் இந்த சந்திப்பின்போது வழக்கத்தைவிடவும் வேறு வகையில் பதில்களை கூறிவந்தார் டோணி.
சில நேரங்களில் சிரித்தபடியும், சில நேரத்தில் கடுப்புடனும் டோணி கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்தியா தோற்றது கிடையாதுதான். ஆனால் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக ஆடி வரும் இவ்விரு அணிகளிலுமே, பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. வீரர்கள் மாறிவிட்டனர், விளையாடும் முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இன்னமும் ஒரே நம்பிக்கையில் மெத்தனமாக ஆட முடியாது என்றார் டோணி.
அணியில் உள்ள வீரர்கள் காயமின்றி நல்ல உடல் தகுதியுடன் உள்ளனரா என்ற கேள்விக்கு, ஆமாம் என்று பதில் அளித்தார் டோணி. ஆனால் மாற்றி மாற்றி வெவ்வேறு வார்த்தைகளை போட்டு அதே கேள்வியை நிருபர்கள் கேட்டதால் சற்று கோபமடைந்தார் டோணி. ஆனால் அதையே நகைச்சுவை உணர்வுடன் இப்படி சொன்னார். "இன்று சாயங்காலம் யாருக்கு காயம் ஏற்படும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் பிரஸ் மீட்டுக்கு வரும் வரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எல்லோரும் நலமாக இருப்பதாகத்தான் உடற்பயிற்சியாளர் என்னிடம் கூறினார்" என்று டோணி கூறினார்.
மற்றொரு செய்தியாளர் 'கடந்த இரு மாதங்களில் ஆப்கானிஸ்தானுடனான பயிற்சி போட்டியை கழித்து விட்டு பார்த்தால்...' என்று இந்தியாவில் தோல்வி குறித்து கேட்க தொடங்கினார். அதற்குள் முந்திக் கொண்ட டோணி, "ஆப்கானிஸ்தான் போட்டியை ஏன் கழிக்க வேண்டும்" என்று கேட்டு வாயை அடைத்துவிட்டார்.
ஒரு செய்தியாளர் ஷிகர் தவானின் மோசமான ஆட்டம் குறித்து ரசிகர்கள் கவலை தெரிவிப்பதாக கேட்டார். அதற்கு டோணி அளித்த பதில்தான் ஹைலைட். "நான் ரசிகர்கள் கருத்தை கேட்க ஆரம்பித்தால், மற்றொருவர் வந்து, ஒப்பனிங்கில் தவானுக்கு பதிலாக முகமது ஷமியை களமிறக்குங்கள் என்றும் கூறுவார். எல்லா நேரமும் ரசிகர்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று அவசியமில்லை" என்றாரே பார்க்கலாம்.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
» ரசிகர்கள் சொல்றதையெல்லாம் கேட்க முடியாதுங்க... நிருபர்களிடம் எடக்கு முடக்கு செய்த டோணி!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment