↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பையின் தொடக்க நாளிலேயே இப்படி ஒரு அவுட்-ஸ்டேண்டிங் கேட்ச் பிடிக்கப்படும் என்று எந்த நாட்டு ரசிகருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அப்படியொரு கேட்சை பிடித்து அசத்தினார், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். 13.4 ஓவர்களில் 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து. அப்போது மிட்சல் மார்ஷ் பந்து வீச இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 10 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
ஓவரின் ஐந்தாவது பந்தை மார்ஷ் சற்று ஆப் சைடில் வீசினார். அந்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையை நோக்கி அதிவேகமாக அடித்தார் ஜோஸ் பட்லர். ஆனால் சில்லி மிட் ஆப் (ஆப் சைடு பகுதியின் நடுவில்) பகுதியில் நின்று கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், தனது இடது கை பக்கம் மேல் நோக்கி டைவ் அடித்து அசத்தலாக அதை கேட்சாக மாற்றினார்.
கிரிக்கெட் வரலாற்றில் சில கேட்சுகள் ரசிகர்கள் மனதை விட்டு என்றும் அகன்றதில்லை. ஜான்டி ரோட்ஸ், ரிக்கி பாண்டிங், யுவராஜ் சிங் போன்ற தலைசிறந்த ஃபீல்டர்கள் அவ்வாறான கேட்சுகளை பிடித்துள்ளனர். ஆனால் உலக கோப்பையின் முதல் நாள் போட்டியிலேயே அதுபோன்ற ஒரு கேட்சை பார்க்கும் அதிருஷ்டம் இன்று ரசிகர்களுக்கு சிக்கியது என்றால் மிகையில்லை.
Home
»
sports
»
sports.tamil
» வாவ்.. வாட் ஏ கேட்ச்..! ரசிகர்களை வாய் பிளக்க வைத்த ஆஸி. வீரர் ஸ்மித்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment