இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி, தன் கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த சில நிகழ்வுகள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி கூறியதால் தான் கங்குலி அணியிலிருந்து நீக்கப்பட்டதாக பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பிரசுன் முகர்ஜி கூறியிருந்தார்.
ஜடேஜாவை தீட்டித் தீர்த்த கங்குலி
சமீபத்தில் காயத்திலிருந்து குணமடைந்து இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய ஜடேஜா, எந்த இலக்கும் இல்லாமல் பந்தை தூக்கி அடித்து மோசமாக ஆட்டமிழந்தார். இதை கங்குலி கோபமாக விமர்சனப்படுத்தி இருந்தார்.
பாஜகவில் சேரும் எண்ணம் இல்லை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி விரைவில் பா.ஜனதாவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
சச்சினை கிண்டல் செய்த கங்குலி
இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் கால்பந்து தொடரின் போது, சச்சினுக்கு நான் கால்பந்து கற்றுக்கொடுக்க வேண்டும். அவர் அவ்வளவாக கால்பந்து விளையாடமாட்டார். இப்போது கொல்கத்தா அணியுடன் திறம்பட மோதுவதற்காக அவர் கால்பந்து விளையாட கற்றுக் கொள்ள வேண்டும் என்று கிண்டல் செய்தார்.
தவானை கழற்றிவிட வேண்டும்
கடந்த 2014ம் ஆம் ஆண்டு தொடக்க வீரராக தொடர் சொதப்பில் ஈடுபட்ட தவானை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக கம்பீரை சேர்க்க வேண்டும் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment