↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மும்பையில் மாணவிகளை ஆபாச வீடியோக்களை பார்க்க வைத்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் சுலைமான் ஷேக்(35). அவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டியுள்ளார். ஆபாச படத்தை பார்க்க மறுப்பவர்களை தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவேன் என்று மிரட்டி மிரட்டியே மாணவிகளை ஆபாச வீடியோ பார்க்க வைத்துள்ளார்.
ஆசிரியருக்கு பயந்து மாணவிகள் பள்ளியில் நடப்பதை வெளியே கூறாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாணவி சுலைமானின் கேவலமான செயல் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் இது குறித்து புதன்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுலைமானை கைது செய்தனர். சுலைமான் கடந்த 5 ஆண்டுகளாக அந்த பள்ளியில் தான் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியரின் இந்த செயல் மாணவ, மாணவியரின் பெற்றோரை கோபமும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment