↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பை தொடரின் துவக்கவிழா இன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 14ம் தேதி சனிக்கிழமை, துவங்குகிறது. மார்ச் 29ம் தேதி வரை, இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன.
இதற்கான துவக்க விழா, இரண்டு நாள் முன்னதாக இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு விழா துவங்கியது. மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்' என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் வீரர்கள் அணிவகுப்பு அடுத்து துவக்கவிழா உரையை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகிகள் ஜெசிகா மாவ்பாய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் திறமை வெளிப்படுத்தினர்.
நியூசிலாந்தில் நடக்கும் விழாவில் உள்ளூர் அணிகள், முன்னாள் ஜாம்பவான்கள் ரிச்சர்ட் ஹாட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலில் வரவேற்பு நிகழ்ச்சி, அடுத்து பூகம்பத்தில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரம் மீண்டெழுந்தது குறித்து காட்சி காண்பிக்கப்பட்டது. நியூசிலாந்து பாடகி கினி பிளாக்மோர், ‘சோல் 3 மியோ' குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. முடிவில், கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
இவ்விரு நகரங்களிலுமே இப்போது இரவு நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளதால் துவக்க விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த துவக்க விழா நிகழ்ச்சிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளது. நிகழ்ச்சியில் நியூசிலாந்தின் பூர்வ குடிமக்களான மவுரி இன மக்களின் பாரம்பரிய நடனம் காண்போரை கவர்ந்தது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» நியூசிலாந்தின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சிகள் ஆரம்பம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment