சினிமாவை பொறுத்தவரை வெற்றி, தோல்வி என்பது யாருக்கும் சொந்தம் கிடையாது, இன்னைக்கு வெற்றி பெற்றவன் நாளை தோற்கலாம், தோற்றவன் நாளை வெற்றி பெறுவான் இது தான் வாழ்க்கையும் கூட.
ஆனால் எவன் ஒருவன் தோல்வியில் துவண்டு இருப்பவனை தட்டி கொடுக்கிறானோ அவன் வெற்றியை மட்டுமே சம்பாதிப்பான். அப்படித்தான் தல அஜித்தும், கடைசியாக வந்த இரண்டு படங்களும் தோல்வியை கொடுக்க நடிகர்கள் கால்ஷீட் தரமறுக்க என பல கஷ்டத்தில் இருந்த கௌதம் மேனனை அஜித் அழைத்து வாய்ப்பு கொடுத்தார்.
அவர் கொடுத்த வாய்ப்பை கெடுக்காமல் நல்ல படத்தை கொடுத்தார் கௌதம், அதற்காக அஜித் நான் தான் வாய்ப்பு கொடுத்தேன் என்று மார்தட்டிக்கொள்ளாமல் கௌதமுக்கு போன் போட்டு வாழ்த்துகள் கூற கௌதம் ‘சார் படம் உங்களுக்கு திருப்தியா இருக்கா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அஜித் ‘சார் நீங்க நிம்மதியா இருக்கீங்களா, அது போதும்’ என்று கூறியுள்ளார்.
மேலும், படத்தின் லாப, நஷ்ட கணக்கெல்லாம் வேண்டாம், நம் அடுத்த வேலையை பார்க்க தொடங்குவோம்’ என கூற கௌதம் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என மெய் சிலிர்த்து போனாராம். அதுதான் ‘தல’ என்ன நான் சொல்லுறது….
0 comments:
Post a Comment