இளைய தளபதி விஜய் என்றாலே எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால், அவருடைய நெருங்கிய நண்பர்கள் அப்படி தான் ஒன்றும் இல்லை விஜய் மிகவும் கலகலப்பானவர் என்று கூறுவார்கள்.
இந்நிலையில் தற்போது தளபதி நடித்து வரும் புலி படத்தில் காட்டுக்குள் சிலர் விஜய்யை தேடி வருவது போல் ஒரு காட்சியாம். இதை சிம்புதேவன் சமீபத்தில் கேரளா காட்டுப்பகுதியில் படமாக்கியுள்ளார்.
இந்த காட்சி எடுத்து முடித்தவுடன் விஜய்யிடம் போட்டு காண்பித்துள்ளார் சிம்புதேவன். பொறுமையாக பார்த்த அவர், ஒரு கட்டத்திற்கு மேல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாராம். அப்பறம் என்ன இயக்குனருக்கு ஒரே சந்தோஷம் தான்.
0 comments:
Post a Comment